கோவை:44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி வரும் 28ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதனையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் சார்பிலும் பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் மாநகராட்சி அலுவலகம், அனைத்து மண்டல அலுவலகங்கள், வ.உ.சி பூங்கா, வ.உ.சி மைதானம், ஆர்.எஸ்.புரம், ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட இடங்களில் செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டிகள் நடைபெறுவது குறித்த விளம்பரம் எல்.இ.டி திரைகளில் வைக்கப்பட்டுள்ளன.