குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்துவருகிறது. அதன்படி, டெல்லியில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்தது. ஆனால், காவல் துறையினர் கலவரங்களை ஒடுக்காமல் வேடிக்கைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
டெல்லி கலவரம்: பாஜக, ஆர்எஸ்எஸை கண்டித்து வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் - டெல்லி கலவரம்
டெல்லி கலவரத்திற்குக் காரணமாக இருந்த பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பைக் கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்
பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள்
இந்தக் கலவரம் தொடர்பாகக் கோவை நீதிமன்ற வளாகம் முன்பு 30-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி கலவரத்திற்குக் காரணமாக இருந்த பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்குரைஞர்கள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி மத்திய அரசைக் கண்டித்து வழக்குரைஞர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.