கோயம்புத்தூர்: மத்திய சிறைச்சாலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (அக்.18) ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கோவை மத்திய சிறைச்சாலையில் சிறை கைதிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தோம். கோவையில் உள்ள இந்த சிறையில் கைதிகளுக்காக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
செம்மொழி பூங்கா
தற்போது உள்ள மத்திய சிறைச்சாலைகள் நவீன மயமாக்கப்பட வேண்டும் என்பது முதலமைச்சரின் எண்ணம். திறந்த வெளி சிறைச்சாலைகள் அமைப்பது அரசின் கொள்கை முடிவு. கோவையில் உள்ள மத்திய சிறைச்சாலை மாற்றப்பட்டால் கலைஞர் கருணாநிதி அறிவித்தது போல் செம்மொழி பூங்கா அமைக்கப்படும்" என்றார்.