பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள், வழக்கறிஞர்கள் உட்பட பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட யாரும் தேர்வு எழுத முடியாது என சட்டக் கல்லூரி முதல்வர் அறிக்கை வெளியிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
பொள்ளாச்சி விவகாரம் : சட்ட உள்ளிருப்பு போராட்டம் - சட்டக்கல்லூரி மாணவர்கள் கண்டனம்
கோவை: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைத்து தற்போது சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 167 பேர் மீதான வழக்கை உடனடியாக ரத்து செய்ய கோரியும், ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் கல்லூரி முதல்வரை கண்டித்தும் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.