கோயம்புத்தூர்: அன்னூர் காவல் நிலைய ஆய்வாளராக இருப்பவர் நித்யா. இந்த காவல் நிலையத்தில் மூன்று உதவி ஆய்வாளர்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இங்கு பணிபுரியும் காவலர்களுக்கு பணிச் சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க வாரம்தோறும் வெள்ளிகிழமை நாளில் சிரிப்பு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியின் மூலம் காவலர்களுக்கு மன அழுத்தம் குறைவதோடு, பணியில் உற்சாகத்துடன் இருக்க முடியும் என்கின்றனர்.