தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடோனில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்! - கோவை குடோன் தீ விபத்து

கோவை: சோமனூரில் அட்டைப்பெட்டிகள் வைக்கும் குடோன் ஒன்றில் தீப்பிடித்ததில் அங்கிருந்த பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.

kovai lakhs worth property destroyed in godown fire accident near somanur
குடோன் ஒன்றில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பு பொருட்கள் நாசம்!

By

Published : Dec 22, 2019, 7:53 PM IST

கோவை மாவட்டம் சோமனூரில் சூசைராஜ் என்பவருக்குச் சொந்தமான குடோன் ஒன்று உள்ளது. இதில் வேலுச்சாமி என்பவர் வாடகைக்கு எடுத்து அட்டைப்பெட்டிகள் குடோன் வைத்துள்ளார். இந்தக் குடோனில் இன்று காலை 6.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதில் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அட்டைகள், நூல், காடா துணி போன்றவை தீயில் எரிந்து நாசமாகின. இந்தத் தீயானது வேகமாகப் பரவி அருகிலிருந்த சுதாகர் என்பவருக்குச் சொந்தமான மாவு கடையிலும் தீப்பிடித்தது.

தீ விபத்தில் கடை, குடோன் தீப்பற்றி எரியும் தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து தீயை அணைத்தனர். சூலூர், கோவை தீயணைப்பு நிலையங்களிலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீ அணைக்கப்பட்டது.

விபத்தில் பல லட்சம் மதிப்புடைய பொருள்கள் எரிந்து சாம்பலானது. இந்த விபத்திற்கு மின் கசிவு காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என கருமத்தம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

குடோன் ஒன்றில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பு பொருட்கள் நாசம்!

இதையும் படியுங்க:

மாகாணத்தையே ஸ்தம்பிக்கச் செய்த கட்டுக்கடங்காத காட்டுத் தீ!

ABOUT THE AUTHOR

...view details