தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் 130 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

கோவை: புலியகுளம் பகுதியில் 130 கிலோ குட்கா பொருட்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

புலியகுளம் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள்
புலியகுளம் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள்

By

Published : Dec 31, 2019, 12:13 PM IST


கோவையில் குட்கா பொருட்கள் அதிகமாக பள்ளி, கல்லூரி பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. அதை உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு அதிகளவில் தடுத்துவிட்டனர்.

இந்நிலையில் புலியகுளம் பகுதியில் உள்ள சிறிய கடைகளில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் சோதனை நடைபெற்றது.

அப்போது, 130 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருப்பினும் மளிகை கடைகள், பெட்டிகடைகளில் விதிகளை மீறி குட்கா பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: குட்கா பறிமுதல் வழக்கு: போலி பத்திகையாளர், குடோன் உரிமையாளர் உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details