தமிழ்நாட்டில் முதுமலை, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வனப்பகுதியில் வளர்ப்பு யானைகள் முகாம்கள் உள்ளன. ஆனைமலை புலிகள் காப்பகம், கோழிகமுத்தி யானைகள் முகாமில் 27 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த வளர்ப்பு யானைகளுக்கு ரோந்து பணி, மரங்கள் இழுத்தல், யானை சவாரி, காட்டுயானைகள் ஊருக்குள் நுழைந்தால் விரட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. யானைகளுக்கு தேவையான அனைத்தும் முகாம்களில் வழங்கப்படுகிறது.
கும்கி யானை 'சுயம்பு' சாடிவயல் முகாமிற்கு இடமாற்றம்! - யானை
கோவை: கோழிகமுத்தி யானைகள் முகாமிலிருந்து சாடிவயல் முகாமிற்கு கும்கி யானை சுயம்பு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சுயம்பு
கும்கி யானை சுயம்பு, சாடிவயல் முகாமிற்கு இடமாற்றம்!
இந்நிலையில், கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து கும்கி யானை சுயம்பு, சாடிவயல் முகாமிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாடிவயல் முகாமிற்கு கும்கி யானை தேவைப்படுகிறது என்று கூறியதால், இந்த யானையை அனுப்பியதாக வனத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.