தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ரஜினி பெரியாரை விமர்சிக்கவில்லை, துக்ளக் இதழில் சோ எழுதியதைத்தான் கூறினார்...!' - காவி வண்ணம் விரைவில் வெளுத்து போகும்

கோயம்புத்தூர்: ரஜினி பெரியாரை விமர்சிக்கவில்லை என்றும் துக்ளக் இதழில் சோ எழுதியதைத்தான் கூறியதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி
செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி

By

Published : Jan 26, 2020, 2:58 PM IST

கோவை காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறுகையில், “முதலில் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். காந்தியடிகள் பல நாடுகளை ஒன்றிணைத்து, இந்தியா என்று ஒரே நாடாக மாற்றினார்.

ஆனால், தற்போது உள்ள பாரதிய ஜனதா கட்சி ஒரு நாட்டை பல நாடுகளாக சிதற செய்வதற்கான வேலைசெய்கிறது. தற்போது உள்ள பாரதிய ஜனதா கட்சி இந்தியாவில் வாழும் மக்களையே நீ இந்தியனா? அதை நிரூபி என்று கூறுவது கண்டனத்திற்குரியது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் பல்வேறு தவறுகள் உள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து இளைஞர்கள் போராடுவது மகிழ்ச்சியளிக்கிறது. சுதந்திரம் கிடைப்பதற்காக நடைபெற்ற போராட்டத்தைவிட அதை பேணிக்காக்க நடைபெறும் இந்தப் போராட்டம் வலிமையானது" என்றார்.

பெரியார் குறித்து ரஜினி பேசியதை குறித்து செய்தியாளர்கள் கேட்கையில், “ரஜினி பெரியாரை விமர்சிக்கவில்லை, துக்ளக் இதழில் சோ எழுதியதைத்தான் கூறினார். ஆனால், அவர் செய்த தவறு என்னவென்றால், சோ பெரியாருக்கு எதிராகக் கூறியதை மட்டும் கூறிவிட்டு, பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகக் கூறியதை கூறவில்லை. அதுதான் ரஜினி செய்த தவறு.

அதிமுக அரசு எதிலும் முடிவெடுப்பது கிடையாது. கொள்கை ரீதியாக எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. மேலும் 5, 8, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வைக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ். அழகிரி

தமிழ்நாட்டில் பொருளாதாரம் முற்றிலும் தவறாக உள்ளது. உதாரணமாகக் கட்டுமான தொழிலே நடைபெறாதபோது சிமெண்ட் விலை குறையாமல் இருப்பது எப்படி? அதிமுகவில் செல்லூர் ராஜு என்று ஒரு விஞ்ஞானி மட்டும்தான் இருந்தார், தற்போது ஜெயகுமாரும் விஞ்ஞானி ஆகிவிட்டார்" எனக் கூறினார். மேலும், பாஜகவின் காவி வண்ணம் விரைவில் வெளுத்துப்போகும் எனவும் சாடினார்.

இதையும் படிங்க: பாஜக அறக்கட்டளைகளை பொதுவுடைமையாக்க முடியாதா? - ஹெச். ராஜாவுக்கு அழகிரி பதிலடி

ABOUT THE AUTHOR

...view details