கோயம்புத்தூர்: கவுண்டம்பாளையம் பகுதியில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இனிப்பு வகைகள் தயாரிக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது. அந்தப் இடத்தின் அருகில் அட்டைப்பெட்டிகள் அடுக்கி வைக்கப்படும் அறையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் புகை மூட்டம் நிலவியது.
தீ வேகமாக எரிவதைப் பார்த்த ஊழியர்களும், பொதுமக்களும் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர், தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.