திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். கோவை ஆர்எஸ் புரம் அருகே உள்ள சீரநாயக்கன் பாளையம் பகுதியில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் சுந்தர்ராஜன் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார்.
திருமணம் செய்வதாகக் கூறி சிறுமி கடத்தல் - இளைஞர் போக்சோவில் கைது - kovai district News
கோவை: சிறுமியை கடத்திச் சென்ற இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
![திருமணம் செய்வதாகக் கூறி சிறுமி கடத்தல் - இளைஞர் போக்சோவில் கைது](https://etvbharatimages.akamaized.net/assets/images/breaking-news-placeholder.png)
சிறுமி காணாமல்போனதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சிறுமியை தேடிவந்த நிலையில், சுந்தர்ராஜன் என்பவர் சிறுமியை கடத்திச் சென்று திண்டுக்கல்லில் வைத்துள்ளதாக தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் சென்ற காவல் துறையினர் தனது தந்தையுடன் தங்கி இருந்த சுந்தர்ராஜனை கைது செய்து சிறுமியை பத்திரமாக மீட்டனர். இதனைத் தொடர்ந்து சுந்தரராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.