கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (20). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் நட்புடன் பழகி வந்துள்ளார்.
சிறுமியின் புகைப்படத்தை தவறாக வெளியிடுவதாக மிரட்டியவர் கைது! - கோவை போக்சோ கைது
கோவை: காதலுக்கு மறுப்பு தெரிவித்த சிறுமியின் புகைப்படத்தை இணையத்தில் தவறாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
police
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக சிறுமியிடம் தான் காதலிப்பதாக கூறியுள்ளார். இதற்கு அந்தச் சிறுமி மறுத்திடவே, ஆத்திரமடைந்த தமிழ்செல்வன் சிறுமியை 'என்னை காதலிக்காவிட்டால் நட்பாக பழகியபோது எடுத்த புகைப்படத்தை எல்லாம் இணையத்தில் வேறு விதமாக வெளியிட்டு விடுவேன்' என்று மிரட்டியுள்ளார்.
இது குறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் சிறுமியுடன் சென்று மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்தப் புகாரின் பேரில் தமிழ்செல்வனை கைது செய்த மதுக்கரை காவல்துறையினர் கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை மேலும் போக்சோ சட்டப்பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்து செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:பெண்ணை தவறான உறவுக்கு அழைத்த போலி ரிப்போர்ட்டர் உள்பட இருவர் கைது!