தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்கு எண்ணிக்கை மையத்தில் திமுக, அதிமுக கைகலப்பு! - Sulur DMk ADMK Fight

கோவை: வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது திமுக, அதிமுகவினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.

Kovai Ballot problem
Kovai Ballot problem

By

Published : Jan 2, 2020, 7:16 PM IST

கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியம், அரசூர் ஊராட்சியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சூலூர் ஆண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து, வாக்குகள் எண்ண எடுத்து வரப்பட்ட 12 வாக்குப் பெட்டிகளில் ஏற்கனவே சீலிடப்பட்ட முத்திரைகள் சரியாக இல்லை எனவும் வாக்குப் பதிவின் போது வாக்குப் பெட்டி சுற்றப்பட்ட துணிக்குப் பதிலாக வேறு ஒரு துணி இருப்பதாக திமுகவினர் அலுவலர்களிடம் முறையிட்டனர்.

அப்போது, அங்கு வந்த அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர் இரு தரப்பினரையும் அழைத்துச் சென்றனர்.

கைகலப்பில் ஈடுபட்ட திமுக, அதிமுகவினர்

இதனிடையே, சூலூர் ஊராட்சி ஒன்றியம் பதுவம்பள்ளி ஊராட்சியில் வாக்குப் பெட்டியில் முத்திரை இல்லை என வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அரசூர் ஊராட்சியில் 12 வாக்குப் பெட்டிகளில் முத்திரை பதித்த துணிகள் மாற்றப்பட்டதாகப் புகார் எழுந்து கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:திமுகவின் வெற்றியைத் தடுக்க அதிமுக அரசு சதி!

ABOUT THE AUTHOR

...view details