கோவை மாவட்டம் வால்பாறையை உள்ளடக்கிய பகுதியாக ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. அதில் வால்பாறை, பொள்ளாச்சி, மானாம்பள்ளி, டாப்சிலிப் என நான்கு வனச்சரகங்கள் உள்ளன.
இவற்றில் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் வனத்தைக் காப்பது, வன விலங்குகளைக் காப்பது, மனித வன உயிரின மோதலைத் தடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.
இவர்களை ஊக்குவிக்கும்பொருட்டு வால்பாறை அட்டகட்டி பயிற்சி மையத்தில் நடைபெற்ற விழாவில், ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி கோட்ட உதவி கள இயநக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் தலைமையில், அடர்ந்த வனப்பகுதிகளில் பணியாற்றும் வன ஊழியர்களை ஊக்குவிக்கும்பொருட்டு அவர்களுக்கு கேடயமும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் அவர்களின் பணி தொய்வின்றி நடைபெற புதிய சீருடைகள், சூ, தொப்பிகள் வழங்கப்பட்டன.
மேலும் பொள்ளாச்சி அரிமா சங்கம் சார்பில் வன ஊழியர்களுக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான மழைநீர் புகாத ஆடைகள் (Rain Coats) வழங்கப்பட்டன.