தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை கனமழை: வால்பாறை பேருந்து பணிமனையில் புகுந்த வெள்ளம்! - valparai bus depot flooded

கோவை: வால்பாறையில் பெய்துவரும் கனமழை காரணமாக அரசு போக்குவரத்து கழக பேருந்து பணிமனையில் வெள்ளம் புகுந்ததால் பேருந்துகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

rain
rain

By

Published : Aug 7, 2020, 12:31 AM IST

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் வால்பாறையில் உள்ள புதுத்தோட்டம் ஆறு, நடுமலை ஆறு, கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதேபோல் வாழைத்தோட்டம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் டோபி காலனி, அரசு போக்குவரத்து கழக பணிமனைக்குள் வெள்ள நீர் புகுந்ததையடுத்து போக்குவரத்து கழக அலுவலர்கள் பேருந்துகளை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினர்.

மேலும் பணிமனையில் உள்ளேயிருக்கும் பேருந்து டயர்கள், உதிரி பாகங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினர். மேலும் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதை பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர், நகராட்சியினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேற்படி ஆற்றுப் படுகைகளில் உள்ள உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:பலத்த மழையால் நீரில் மிதக்கும் கோவை மாநகரம்!

ABOUT THE AUTHOR

...view details