கோயம்புத்தூர்:கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் 63-வது வார்டில் 18 லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பொதுமக்கள் பயன்பாடிற்காக துவக்கி வைத்தார்.
ராமநாதபுரம் 63-வது வார்டு மக்களுக்கு என பிரத்யேகமாக நவீன அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் நாளொன்றுக்கு பொது மக்கள் 20 லிட்டர் தண்ணீர் வரை எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் கூறியதாவது: "இதுபோன்ற சுத்திகரிப்பு இயந்திரங்களை இந்த ஆண்டு இறுதிக்குள் தொகுதியின் 5 இடங்களில் நிறுவ திட்டமிட்டுள்ளது.கோவை மாநகரில் சாலை வசதிகள் குறித்து பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. சாலை விஷயத்தில் தமிழக அரசு கோவை மாநகராட்சிக்கு துரோகம் செய்து வருகிறது.