கடந்த சில நாள்களாக கோவை, அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சந்தன மரக் கடத்தல் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனைத் தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சந்தன மரக் கடத்தலை இதுவரை தடுத்து நிறுத்த முடியவில்லை.
கடந்த வாரம் சந்தன மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த மூன்று பேரைக் காவல் துறையினர் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் சந்தன மரக்கடத்தல் தொடர்பாக சிலரை வலை வீசித் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை ஆனைகட்டி அருகேயுள்ள மத்திய அரசின் நிறுவனமான சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில், கடந்த இரண்டு நாள்களில் 8க்கும் மேற்பட்ட சந்தன மரங்களைக் கடத்தல்காரர்கள் வெட்டிக் கடத்தி உள்ளனர்.