தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொத்துக்காக தந்தையைக் கொன்ற வளர்ப்பு மகன் கைது! - பொள்ளாச்சியில் சொத்துக்காக தந்தையைக் கொன்ற வளர்ப்பு மகன் கைது

கோவை: பொள்ளாச்சி அருகே சொத்துக்காக தந்தையைக் கொலை செய்த வளர்ப்பு மகனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பொள்ளாச்சியில் சொத்துகாக தந்தையை கொன்ற வளர்ப்பு மகன் கைது
பொள்ளாச்சியில் சொத்துகாக தந்தையை கொன்ற வளர்ப்பு மகன் கைது

By

Published : May 31, 2020, 9:52 PM IST

பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன்ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (80), இவரது மனைவி ஸ்ரீரங்கம். இவர்களுக்குத் திருமணமாகி குழந்தைகள் இல்லாததால், அவரது உறவினர் குழந்தையான மணிகண்டனை ஏழு மாதக் குழந்தையாக இருந்தபோது தத்தெடுத்து, பெற்ற மகன் போல் வளர்த்துள்ளனர்.

தற்போது மணிகண்டனுக்குத் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் ஸ்ரீரங்கம் கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். 80 வயதான கிருஷ்ணசாமி தனியாக இருந்து வந்துள்ளார்.

மணிகண்டன் தன் குடும்பத்துடன் வேறு வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணசாமி, திடீரென இறந்துவிட்டதாக மணிகண்டன் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

தலையில் காயம் இருந்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள், மேற்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இயற்கை மரணம் என வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் உடற்கூறு அறிக்கையில், தலையில் பலமாகத் தாக்கிய காயங்கள் இருப்பதும்; அதனால் முதியவர் இறந்ததும் தெரியவந்தது. அதையடுத்து மணிகண்டனை காவல் துறையினர் விசாரித்துள்ளனர்.

அதில், கிருஷ்ணசாமியிடம் சொத்தை தன் பெயருக்கு எழுதி வைக்குமாறும்; பணம் வேண்டும் என்றும் கேட்டு அடிக்கடி மணிகண்டன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தர மறுத்ததால், அவரைத் தாக்கி கீழே தள்ளிவிட்டு, கொலை செய்ததாக மணிகண்டன் ஒப்புக்கொண்டார்.

பின்னர் மணிகண்டனை கைது செய்த காவல் துறையினர், அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சொத்துக்காக தந்தையை வளர்ப்பு மகனே அடித்துக்கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த தலைமை காவலர் கைது!

ABOUT THE AUTHOR

...view details