கோயம்புத்தூர் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த மாதம் 23ஆம் தேதி கார் வெடித்த சம்பவத்தில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சமூக வலைதளத்தில் பல்வேறு விமர்சனங்கள் கிளம்பின. இதனால் கார் வெடிப்பு சம்பவம் குறித்து அமைதியை சீர்க் குலைக்கும் வகையில் கருத்து பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகர காவல் துறையினர் எச்சரித்தது.
கிஷோர் கே சாமி மீது வழக்குப்பதிவு - coimbatore car blast case
கோயம்புத்தூர் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் அமைதியைக் சீர்க் குலைக்கும் வகையில் கருத்து பதிவிட்டதாக கிஷோர் கே சுவாமி மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இருப்பினும் சிலர் கருத்து தெரிவித்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுவருகிறது. அந்த வகையில் சென்னையில் வசித்து வரும் கிஷோர் கே சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்து அமைதியைக் சீர்க் குலைக்கும் வகையில் உள்ளதாக கூறி கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் கிஷோர் கே சுவாமி மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:கோவை கார் வெடிப்பு - ‘எனது மகன்கள் குற்றவாளி இல்லை’... பரபரப்பு ஆதாரத்தை வெளியிட்ட தாய்...