நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியின் மகள் கோவை கணியூரில் உள்ள தனியார் பஞ்சாலையில் பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ராய்மோன் என்பவர் அந்தச் சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தைக் கூறி கேரளாவிற்கு கடத்திச்சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து பெண்ணின் பெற்றோர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து கேரளாவிலிருந்து கோவைக்கு ரயிலில் வந்த ராய்மோனையும் சிறுமியையும் காவல் துறையினர் கருமத்தம்பட்டி காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில் சிறுமி 17 வயதுடையவர் என்று தெரியவந்ததால் ராய்மோன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.