தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பில்லூர் அணையைத் தூர்வார சிறப்புக் குழு! - கோவை பில்லூர் அணை

கோவை : 54 ஆண்டுகளுக்குப் பிறகு, பில்லூர் அணையைத் தூர்வார சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

kovai Pillur dam issue
kovai Pillur dam issue

By

Published : Jul 10, 2020, 7:29 AM IST

Updated : Jul 10, 2020, 8:30 AM IST

கோவை மாவட்டம், அத்திக்கடவு அடுத்த பில்லூர்ப் பகுதியில் கடந்த 1961ஆம் ஆண்டு தொடங்கி 1966ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது, பில்லூர் அணை. இது கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

நீலகிரி மாவட்டத்தில் தொடங்கி கேரளா வழியாக பில்லூர் அணைக்கு வரக்கூடிய பவானி ஆற்றில், ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருப்பதால், பில்லூர் அணையில் நாள்தோறும் 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும் அதன் உபரி நீர் விவசாய மற்றும் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் கோவை மாநகராட்சிக்குப் பில்லூர் அணையிலிருந்து இரண்டு கூட்டுக் குடிநீர் திட்டங்களாகப் பிரிக்கப்பட்டு 125 எம்எல்டி குடிநீர் நாள்தோறும் எடுக்கப்பட்டு வருகிறது.

100அடி அளவிற்கு நீர்த்தேக்கம் உள்ள இந்த அணையில் பாதிக்கும்மேல் சேறு நிறைந்துள்ளதால், தேக்கி வைக்கப்படும் நீரின் அளவு குறைவதோடு மட்டுமல்லாமல், வரும் காலத்தில் மின்சாரம் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்போது உள்ள நிலையைக் கருத்தில் கொண்டு அணையைத் தூர்வாருவது தொடர்பாக மின்சார வாரியம், பொதுப்பணித்துறை, வனத்துறை, உள்ளாட்சித்துறை இணைந்து அணையைத் தூர்வார சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் நவீன முறையில் அணையின் அடிப்பகுதியில் சேர்ந்துள்ள சேற்றை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ராட்சத படகுகள் கொண்டுவரப்படவுள்ளன. இந்த தூர்வாரும் பணிகளை இரண்டு ஆண்டுகளில் முடிக்கவும் சிறப்புக்குழு முடிவு செய்துள்ளது.

ஏற்கெனவே 1991ஆம் ஆண்டு அணையைத் தூர்வார திட்டமிடப்பட்டது. ஆனால், தொடர்ச்சியான மழை காரணமாக தற்போது வரை, பில்லூர் அணை தூர்வாரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jul 10, 2020, 8:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details