தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மலைவாழ் மக்களின் பொங்கல் கொண்டாட்டம் - மலைவாழ் மக்கள் பொங்கள் கொண்டாட்டம்

கோவை: பொள்ளாச்சி அருகே தம்மம்பட்டி மலைவாழ் மக்கள் நடனமாடி உற்சாகத்துடன் பொங்கல் விழாவினைக் கொண்டாடினர்.

pollachi tribes pongal celebration
தம்மம்பட்டி மலைவாழ் மக்கள் பொங்கள் கொண்டாட்டம்

By

Published : Feb 1, 2020, 9:09 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் ஏராளமான மலைவாழ் மக்கள் கிராமங்கள் உள்ளன. இவர்கள் இப்பகுதியில் வன விலங்குகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு அரணாக விளங்குகிறார்கள்.

மலைவாழ் மக்களின் திருவிழாக்கள் மிகவும் விசேஷமானதாகும். அதிலும் பொங்கல் திருவிழா என்றால் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடுவார்கள். மலைவாழ் அல்லாத மக்கள் தை 1ஆம் நாள் கொண்டாடுவதை மலைவாழ் மக்கள் ஒரு வாரம் கழித்து வருகின்ற அடுத்த வாரத்தில் கொண்டாடுவதை வழக்கமாகக் கடைபிடிக்கிறார்கள்.

அதேபோல் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தம்மம்பதி மலைவாழ் கிராமத்தில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. புதுப்பானையில் பால், பச்சரிசி இட்டு பொங்கல் வைத்து அங்குள்ள அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது.

மேலும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்து அவர்கள் நடனம் ஆடியது அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது. திருவிழாவில் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் கலந்துகொண்டனர்.

தம்மம்பட்டி மலைவாழ் மக்கள் பொங்கல் கொண்டாட்டம்

இதையும் படிங்க:பொங்கல் விடுமுறையை பயன்படுத்தி 17 சவரன் நகை திருட்டு! - அதிர்ச்சியில் மருத்துவர் குடும்பம்

ABOUT THE AUTHOR

...view details