கோவையில் கரோனா தொற்று அதிகமாகி வரும் நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் கிராஸ்கட் சாலையில் உள்ள லட்சுமி காம்ப்ளக்ஸ் உள்பட இரண்டு கடைகளில் பணிபுரியும் 10க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தொற்று உறுதியானது.
கரோனா பரவல் அதிகரிப்பு - செப். 6ஆம் தேதி வரை கிராஸ்கட் சாலையில் கடைகள் அடைப்பு
கோயம்புத்தூர்: கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வரை கிராஸ்கட் சாலையில் உள்ள அனைத்துக் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
shop shut
இதனால் லட்சுமி காம்ப்ளக்ஸ் உடன் மற்ற இரண்டு கடைகளும் மூடப்பட்டன. இந்நிலையில், கோவை கிராஸ்கட் சாலை அசோசியேஷன், நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு இன்று மாலை 7 மணி முதல் செப்டம்பர் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு வரை கடைகள் அடைக்கப்படும் என்று முடிவெடுத்து உள்ளனர்.
இந்த ஒரு வார காலத்திற்கு கிராஸ்கட் சாலையில் உள்ள எந்த கடைகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.