நவராத்திரி விழா என்றாலே பெரும்பாலானோர் வீட்டில் ஒன்பது நாள்களுக்கு கொலு பொம்மைகள் வைத்து விரதமிருந்து லக்ஷ்மி தேவியை வழிபடுவது வழக்கம். அந்த ஒன்பது நாள்களும் கொலு வைத்தவர்கள் இல்லத்தில் பூஜைகள் செய்து படையல், விருந்துகள் வைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் வரலாற்று நிகழ்வுகள், கடவுள் வழிபாடுகள் போன்றவற்றைக் கொலு பொம்மைகளாக வைத்து வழிபடுவர்.
அதேபோல், இந்த காலத்தில் நவீன விஷயங்கள் அதிகமாக வரத் துவங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு வீட்டில் நவீன யுகத்தில் இருக்கும் நடைமுறை வாழ்க்கையினை கொலு பொம்மைகளாக வைத்து வருகின்றனர். நவராத்திரி விழா முடிவடைய உள்ள நிலையில், கோவை டிவிஎஸ் நகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் இந்த வருடம் உலகையே அச்சுறுத்தி வந்த கரோனா வைரஸ் ஒழிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, விநாயகர் சிலைக்கு முக கவசம் அணிவித்தது போல் கொலு பொம்மைகள் வைத்து வழிபட்டனர்.