அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திரண்டு வீடற்ற ஏழை மக்களுக்கு தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் மூலம் இலவச வீட்டு மனை ஒதுக்கி தர வேண்டியும், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், மத்திய அரசு உடனடியாக சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், தங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, வீடற்ற ஏழை மக்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்படும் வீடுகளில் இலவச வீடு ஒதுக்கி தருமாறு 300 மனுக்களை அளித்தனர்.