கோவை மாவட்டத்திலிருந்து 141 பேரும் வெளி மாவட்டத்தில் இருந்து 33 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 1,785ஆக உயர்ந்துள்ளது
கோவையில் ஒரே நாளில் 141 பேருக்கு கரோனா உறுதி - kovai Latest News
கோவை : ஒரே நாளில் 141 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 1,785ஆக உயர்ந்துள்ளது.
kovai Latest Corona Update
கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் இருந்து 34 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 696ஆக உள்ளது.
கோவை மாவட்டத்தில் 56 வயது பெண், 50 வயது பெண், 60 வயது பெண், 70 வயது ஆண், 59 வயது ஆண் ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.