கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் நான்காவது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. கோவை மாவட்ட நிர்வாகமும், கோவை ஜல்லிக்கட்டு சங்கமும் இணைந்து நடத்திய இந்த போட்டியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1000 காளைகளும், 750-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் காளைகளும் போட்டியில் பங்கேற்றன.
வாடிவாசலிலிருந்து சீறிப் பாய்ந்து வந்த காளைகளை பிடிக்க காளையர்கள் மல்லுக்கட்டினர். காளைகளைப் பிடித்த காளையர்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் தங்க நாணயங்கள், பரிசாக வழங்கப்பட்டன.
அதிகபட்சமாக 15 மாடுகளை பிடித்த மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் என்ற வீரருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.