கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் தமனி நாளம் வீக்கம் ஏற்பட்டு, சுமார் 1.5 சென்டிமீட்டர் விட்டம் இருக்க வேண்டிய தமனி நாளம்,10 மடங்கு பெரிதாகி 15 சென்டிமீட்டரிலிருந்த நிலையில் சிகிச்சைக்காக வந்தார்.
உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு, கடந்த திங்கள்கிழமை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.10 லட்சம் மதிப்பில் தனியார் மருத்துவமனையில் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சை, முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.
ஒரு சில தனியார் மருத்துவமனையில் மட்டுமே செய்யப்பட்டும் இந்த அறுவை சிகிச்சை முதல் முறையாக கோவை அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது.