தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாஃபா பாண்டியராஜன் உருவபொம்மையை கட்டித் தொங்கவிட்ட திமுகவினர்! - Minister mafa pandiarajan

கோவை: மு.க. ஸ்டாலினைப் பற்றி அவதூறாகப் பேசியதாக, அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் உருவ பொம்மையை கட்டி தொங்கவிட்டு, திமுகவினர் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

மாஃபா பாண்டியராஜன் உருவமொம்மையை கட்டி தொங்கவிட்ட திமுகவினர்!

By

Published : Nov 7, 2019, 12:36 PM IST

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மிசா கொடுமையைப் பற்றி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சமீபத்தில் அவதூறாகப் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

அந்தவகையில், கோவைபுறநகர் தெற்கு மாவட்ட திமுக சார்பில், பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் உள்ள கோட்டூர் மேம்பாலத்தில், மாஃபா பாண்டியராஜனின் உருவ பொம்மையைக் கட்டித் தொங்கவிட்டு, கடுமையான எதிர்ப்பை திமுகவினர் தெரிவித்தனர்.

மாஃபா பாண்டியராஜன் உருவமொம்மையை கட்டி தொங்கவிட்ட திமுகவினர்!

இதன்மூலம், அவதூறாகப் பேசிய மாஃபா பாண்டியராஜன், மன்னிப்புக் கேட்க வேண்டுமென திமுகவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நள்ளிரவில் கட்டித் தொங்கவிடப்பட்ட உருவ பொம்மையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details