கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை உப்பாற்றில் சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவுக்கு ஆகாயத்தாமரை, இதர கழிவுப்பொருட்கள் ஆற்றில் சூழ்ந்திருந்தன. இதனைத் தூய்மை செய்யும்விதமாக ஆனைமலை பேரூராட்சி நிர்வாகம் சார்பாக சுமார் ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு அப்பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த பணியானது உப்பாற்றில் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு உள்ள ஆகாயத்தாமரை உள்ளிட்ட இதர கழிவுகளை அப்புறப்படுத்தும் வகையில் சுத்தம் செய்யும் பணியினை வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு தொடங்கி வைத்துடன் ஒரு மாத காலத்துக்குள் ஆற்றின் சுத்தம் செய்யுமாறு அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார்.