தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக ஆட்சி அமைக்க கூட்டணிக் கட்சிகள் அயராது உழைக்கும்- ஈஸ்வரன் - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன்

சென்னை: திமுக ஆட்சி அமைக்க கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் அயராது உழைக்கும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

kmdk
kmdk

By

Published : Mar 13, 2021, 7:51 AM IST

சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு விமானம் மூலம் வந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். பல ஆண்டு தொடர்பில் இருந்த காரணத்தால் தொகுதி உடன்பாடு ஏற்படுவதில் காலதாமதம் ஆனது. மக்கள் விரும்புகின்ற திமுக ஆட்சியை அமைப்போம்.

இதற்கு கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் களமிறங்கி உள்ளோம். தற்போதைய முக்கிய தேவை படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை, தொழில் தொடங்க உதவி. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 13) வெளியிடப்படும். இந்தத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து ஆட்சிமன்றக் குழு முடிவு செய்யும்.

ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான் போட்டியிடும் அவிநாசி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் பரப்புரை மேற்கொள்ளவார்கள். கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் கமல் போட்டியிடுவது திமுக கூட்டணிக்கு வெற்றி பெற வாய்ப்பை ஏற்படுத்தும்” என்றார்.

இதையும் படிங்க: திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தாமதம் ஏன்?- ஈஸ்வரன் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details