கோயம்புத்தூர் மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 13ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
பட்டம் பெறும் மாணவர்கள் பிறருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்! - coimbatore kongunadu arts and science college
கோயம்புத்தூர்: மாணவர்கள் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு மற்றவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் கேட்டுக்கொண்டார்.
இதில், 1077 மாணவர்களுக்கு இளநிலை பட்டங்களும், 312 மாணவர்களுக்கு முதுகலை பட்டங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், "மாணவ மாணவிகள் தற்போது நம்பிக்கை உள்ள வாழ்க்கையை தொடங்கி உள்ளீர்கள். இந்த பட்டத்தின் மூலம் நீங்களே வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, தொழில்களை தொடங்கி உங்களை போன்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.