கோயம்புத்தூர் மாவட்டம், டவுன்ஹால் பகுதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் அனைத்து விழாக்காலங்களுக்கும் சிலைகள் கண்காட்சி நடத்தப்படும். இந்நிலையில், நவராத்திரியை முன்னிட்டு பல்வேறு கொலு பொம்மைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டு விற்பனை செய்து வருகின்றன.
நவராத்திரியை முன்னிட்டு களைகட்டும் கொலு பொம்மை விற்பனை! - kolu dolls sales in tamilnadu
கோயம்புத்தூர் : டவுன்ஹால் பகுதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மை விற்பனை களைகட்டியுள்ளது.
பூம்புகார் விற்பனை நிலையத்தில் கலைகட்டும் கொலு பொம்மைகள்
இந்த வருடம் புதியதாக அத்திவரதர் சிலை, இறந்த முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலை, விவேகானந்தர், காந்தியடிகள், மருதமலை முருகன், திருச்சி மலைக்கோட்டை ஆகிய சிலைகள் கண்காட்சியில் இடம்பெற்று, பார்வையாளரை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதையும் படிங்க : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொலு பொம்மைகள் உற்பத்தி பாதிப்பு !