தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடநாடு கொலை; முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியிடம் தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை...

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியிடம் கோவையில் தனிப்படை போலீசார் மூன்றாவது முறையாக மீண்டும் விசாரணை நடத்தினர்.

ஆறுக் குட்டியிடம் கோவையில் தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை
ஆறுக் குட்டியிடம் கோவையில் தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை

By

Published : Jul 12, 2022, 4:04 PM IST

கோயம்புத்தூர்:கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இதுவரை 250க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இந்த வழக்கு தொடர்பாக மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி மற்றும் அவரது மகன் செந்தில்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நேற்று பாண்டிச்சேரியை சேர்ந்த ரிசார்ட் உரிமையாளரான நவீன் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதனிடையே கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டியிடம் கடந்த மாதம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்ட சூழலில் இன்று மீண்டும் அவரிடம் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

ஆறுக் குட்டியிடம் கோவையில் தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை

இரண்டு மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆறுக்குட்டி, விசாரணையில் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அதற்கு உரிய பதில் அளித்ததாகவும்
எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு அழைக்கலாம் என்றும் எப்போது அழைத்தாலும் வர தயாராக இருப்பதாகவும் கூறியதாக அவர் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே ஆறுக்குட்டியிடம் மறு விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இரண்டு முறை விசாரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆறுக்குட்டியிடம் நடத்தப்படும் இந்த விசாரணை வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

இதையும் படிங்க:கோடநாடு கொலை வழக்கு; சஜீவன் சகோதரர் சுனிலிடம் 7 மணி நேரம் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details