தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எதை கையில் எடுக்கிறார்களோ அவர்களுக்கு அதுவே திரும்பி வரும்... காலணி வீச்சு சம்பவம் குறித்து கே.என்.நேரு

எதை கையில் எடுக்கிறார்களோ அதுவே அவர்களுக்கு வந்து சேரும் என மதுரையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசிய சம்பவம் குறித்து அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

எதை கையில் எடுக்கிறார்களோ அவர்களுக்கு அது திரும்பி வரும்
எதை கையில் எடுக்கிறார்களோ அவர்களுக்கு அது திரும்பி வரும்

By

Published : Aug 14, 2022, 11:18 AM IST

Updated : Aug 14, 2022, 11:27 AM IST

கோயம்புத்தூர்:பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோவை வந்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு பீளமேடு பகுதியில் மரம் நடும் விழாவில் நேற்று (ஆக. 13) கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து, கோவை மாநகராட்சி காந்திபுரம் நகர பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள பொது சுகாதார கழிப்பிட மையத்தை க்யூஆர் கோட் மூலம் மதிப்பீடு செய்யும் வசதியை தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு,"கோவை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன கட்டண கழிப்பிடத்தை க்யூஆர் கோட் மூலம் மதிப்பீடு செய்யும் திட்டத்தை தொடக்கிவைத்தேன். மத்திய அரசிடம் நிதி குறித்து எதைக் கேட்டாலும் ஒரு சட்டம் போடுகின்றனர்" எனத் தெரிவித்தார்.

எதை கையில் எடுக்கிறார்களோ அவர்களுக்கு அது திரும்பி வரும்

தொடர்ந்து மதுரையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் குறித்த கேள்விக்கு,"எதை கையில் எடுக்கிறார்களோ அவர்களுக்கு அது திரும்பி வரும்" என தெரிவித்தார். முன்னதாக இந்த திறப்பு விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:அப்துல் கலாம் கனவு கண்டது போல இந்தியா வல்லரசாக மாறும் எல் முருகன்

Last Updated : Aug 14, 2022, 11:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details