தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி நேரம் தொடர்ச்சியாக கிராமிய இசைக்கருவிகளை வாசித்து சாதனைப் படைத்த இளைஞர்! - கிராமிய புதல்வன் கிராமிய கலைக் குழு

காலில் சலங்கை அணிந்தபடி ஐந்து மணி நேரம் தொடர்ச்சியாக கிராமிய இசைக்கருவிகளை வாசித்து கோவை கல்லூரி மாணவர் ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.

kiramiya puthalvan kalai kulu studnet achievement
5மணி நேரம் தொடர்ச்சியாக கிராமிய இசைக்கருவிகளை வாசித்து சாதனை புரிந்த இளைஞர்

By

Published : Oct 10, 2020, 4:23 PM IST

கோவை : பீளமேடு காந்தி மாநகரில் செயல்பட்டு வரும் கிராமியப் புதல்வன் கலைக்குழுவினர், கிராமியக் கலைகளை தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் பரப்பி வருகின்றனர். இக்குழுவில், கிராமிய இசைக் கருவிகளை வாசிக்கும் பயிற்சியில் ஈடுபட்டுவரும் கல்லூரி மாணவர் விமல்ராஜ், தொடர்ந்து ஐந்து மணிநேரம் கிராமிய இசைக்கருவிகளை வாசித்து சாதனைப் படைத்துள்ளார்.

5 மணி நேரம் தொடர்ச்சியாக கிராமிய இசைக்கருவிகளை வாசித்து சாதனைப் படைத்த இளைஞர்

காலில் சலங்கை அணிந்தபடி கிராமி தோல் இசைக் கருவிகளான பறை, பெரிய மேளம், துடும்பு, நையாண்டி உள்ளிட்ட ஐந்து இசைக்கருவிகளை, தொடர்ந்து ஐந்து மணிநேரம் வாசித்தபடி இவர் சாதனை படைத்துள்ளார். இவரது இந்த சாதனை நோபால் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. விமல்ராஜின் இந்த சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க:பாரதியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details