கோவை :மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரும் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த சினேகா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர், சில தினங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கோவை - அவினாசி சாலை லட்சுமி மில்ஸ் சிக்னல் அருகில் பெண்ணின் உறவினர்கள், பெண்ணை காரில் கடத்த முயன்றுள்ளனர். அப்போது இருவரும் தங்களைக்காப்பாற்றும்படி கதறியதால் அருகில் இருந்தவர்கள் கடத்த முயற்சித்ததை தடுத்து நிறுத்தினர்.
உடனடியாக சம்பவ இடத்தில் இருந்த காவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் இருவரும் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் தங்களைக் கொலை செய்யத்திட்டமிட்டு அழைத்துச் செல்ல முற்படுவதாகவும், தங்களைக் காப்பாற்றும்படியும் காவலர்கள் காலில் விழுந்து காதலர்கள் மன்றாடினர்.
சாலையில் கதறி அழும் காதலர்கள் இதனையடுத்து காதலர்கள் இருவரையும்; உறவினர்களையும் சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : கோனேரிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் கொலை வழக்கு - 4 பேர் கைது