தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேரள பேருந்துகள் மறிக்கப்படும்: பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன்!

கோயம்புத்தூர்: கேரளாவில் உள்ள சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் இல்லையென்றால் அனைத்து கட்சி சார்பில் கேரள பேருந்துகள் மறிக்கப்ப எனபெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கு. இராமகிருட்டினண் பேட்டி.

By

Published : Sep 7, 2019, 9:05 PM IST

Updated : Sep 8, 2019, 8:15 AM IST

பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன்

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழ்நாட்டிற்குச் சொந்தமான சிறுவாணி அணை கேரளாவில் இருக்கின்றது. தற்போது அங்கு மழை பெய்து அணைக்கு நன்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையிலும், அணையின் முழுக் கொள்ளளவான 50 அடிக்கு நிரப்பிவைக்காமல் 42 அடி உயரத்திலேயே வெளியேற்றி ஆற்றில் திறந்துவிடுவதால் அந்த நீர் வீணாகக் கடலில்தான் கலக்கிறது.

இதனை, சேமித்து வைத்தால் வரும் கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் செய்ய முடியும். தமிழ்நாடு அரசு சிறுவாணி அணையின் பராமரிப்பிற்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கில் பணம் அளிக்கிறது. இருந்தும் கேரள அரசு தமிழர்களை வஞ்சிக்கிறது. இதற்காக வருகின்ற பத்தாம் தேதி அனைத்து கட்சி சார்பில் கேரள பேருந்துகளை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்’ என்றார்.

Last Updated : Sep 8, 2019, 8:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details