தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டம்மி துப்பாக்கியுடன் திருநங்கையிடம் சில்மிஷம்.. யூடியூபர்ஸ் கைது! - கேரள யூட்யூபர்கள்

கோவையில் திருநங்கையிடம் டம்மி துப்பாக்கி காண்பித்து தகராறில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த மூன்று யூடியூபர்களை போலீசார் கைது செய்தனர்.

கேரள யூட்யூபர்கள் கைது
கேரள யூட்யூபர்கள் கைது

By

Published : Feb 27, 2023, 12:41 PM IST

கோயம்புத்தூர்:கோவை - மேட்டுப்பாளையம் நோக்கி நேற்றிரவு ஒரு காரில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சென்றுள்ளனர். அப்போது கவுண்டம்பாளையம் அருகே சாலை ஓரம் நின்று கொண்டிருந்த திருநங்கையிடம் சில்மிஷம் செய்துள்ளனர்.

இதனால் மூன்று இளைஞர்களுக்கும் திருநங்கைக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த தகராறால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் சினிமா ஷூட்டிங்கிற்கு பயன்படுத்தப்படும் பொய்யான ஏர்கன் பிஸ்டல் (ஸ்போர்ட்ஸ்) துப்பாக்கி எடுத்து திருநங்கையை மிரட்டியதாக கூறப்படுகிறது.

மேலும் இதனை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு, துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற துடியலூர் போலீசார், டம்மி துப்பாக்கியை பறிமுதல் செய்து மூன்று பேரையும் காவல் நிலையத்திற்க்கு அழைத்து சென்று விசாரனை நடத்தினர்.

விசாரணையில், சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மூன்று பேரும் கேரளாவை சேர்ந்த திலீப் (33), கிஷோர் (23), மற்றும் சமீர் (30) என்பதும், இவர்கள் யூட்யூபர்கள் என்பதும் தெரிய வந்தது. மேலும் ஊட்டி செல்லும் போது இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

திருநங்கையிடம் டம்மி துப்பாக்கி காண்பித்து தகராறு

இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி உத்தரவின் பேரில் ஆயுதச் தடை சட்டம், கொலை மிரட்டல் விடுத்தல் உட்பட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் அவர்கள் வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மீண்டும் 'பவாரியா கொள்ளையர்கள்' ஆதிக்கமா? - சிறப்பு தொகுப்பு

ABOUT THE AUTHOR

...view details