கோயம்புத்தூர்:பொள்ளாச்சி அருகே உள்ள ஒடையகுளத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (40). இவர் அதே பகுதியில் சூப்பர் மார்க்கெட் கடை நடத்தி வருகிறார். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இவரது செல்போனில் பேசிய கேரளா மாநிலம் மேனம்பாறையை சேர்ந்த சண்முகம் (62) என்பவர், தன்னிடம் கருப்பு பணம் இருப்பதாகவும் ஒரு தொகை கொடுத்தால் இரு மடங்கு தொகையாக கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய ராஜேந்திரன், கிணத்துக்கடவு அருகே முள்ளுப்பாடி பகுதியில் காத்திருந்த சண்முகத்திடம் 25,000 ரூபாய் பணத்தை கொடுத்ததற்கு 50,000 ரூபாய் பணத்தை திருப்பி கொடுத்துள்ளார். கடந்த 9 ஆம் தேதி மீண்டும் ராஜேந்திரனுக்கு செல்போன் மூலம் பேசிய சண்முகன், 5 லட்சம் ரூபாய் பணம் கொண்டு வந்தால் 10 லட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறியுள்ளார்.
இதனை நம்பிய ராஜேந்திரன், 5 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு கிணத்துக்கடவு அருகே உள்ள முள்ளுப்பாடி பகுதிக்கு வந்துள்ளார். அப்போது ராஜேந்திரன் கொண்டு வந்த 5 லட்சம் பணத்தை சண்முகனிடம் கொடுத்துள்ளார். இதற்கு பதிலாக பெரிய பிளாஸ்டிக் கவரில் 10 லட்சம் பணம் இருப்பதாக கூறி சண்முகம் ராஜேந்திரனுக்கு கொடுத்துள்ளார்.