கோவை:கரூர் மாவட்டத்தைச்சேர்ந்த குமார் என்பவர் இன்று (நவ.10) கோவை காந்திபுரம் மத்தியப்பேருந்து நிலையத்தில் பேருந்து ஒன்றில் பேக்குடன் ஏரியுள்ளார். அப்போது, அவர் வைத்திருந்த பேக்கிற்கு டிக்கெட் எடுக்கும்படி நடத்துநர் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், குமார் டிக்கெட் எடுக்க மறுக்கவே நடத்துநருக்கும் குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பேருந்தை காட்டூர் காவல் நிலையத்திற்கு ஓட்டிச்சென்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. அப்போது விசாரித்த போலீசார், குமார் வைத்திருந்த பேக்கை சோதனையிட்டதில் உள்ளே, கட்டுக்கட்டாக ரூ.80 லட்சம் பணம் இருந்தைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.