தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கறுப்பர் கூட்டத்தின் பின்னணியில் ஸ்டாலின்?': பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு! - karuppar kootam background stalin

கோவை: கறுப்பர் கூட்டத்தை வளர்த்தது மு.க. ஸ்டாலின் போன்ற தலைவர்கள் என பொள்ளாச்சி ஜெயராமன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

கருப்பர் கூட்டம்: பின்னணி ஸ்டாலின்? என குற்றச்சாட்டு
கருப்பர் கூட்டம்: பின்னணி ஸ்டாலின்? என குற்றச்சாட்டு

By

Published : Jul 24, 2020, 10:16 PM IST

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ரூ. 75 கோடி மதிப்பீட்டில் அம்பராம்பாளையம் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தில் விடுபட்ட குடியிருப்புப் பகுதிகளுக்கு தினமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக பணிகள் நிறைவடைந்த போடிபாளையம், இராசிசெட்டிபாளையம், குளத்தூர் பகுதிகளில் குடிநீர் இணைப்பை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் திறந்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செ. தாமோதரன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கறுப்பர் கூட்டத்தின் பின்னணியில் ஸ்டாலின்? என குற்றச்சாட்டு

பின்னர் செய்தியாளர்களிடம் பொள்ளாச்சி ஜெயராமன் கூறும்போது, "புதுச்சேரியில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு மதச் சாயம் பூசக் கூடாது. சாயம் பூசியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தான் கட்சியில் உள்ள அனைத்து தொண்டர்களின் நிலைப்பாடு. அனைத்து மதங்களையும் சமமாக பார்ப்பது தான் அதிமுகவின் கொள்கை.

திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்று ஸ்டாலின் சொல்வது, கண்கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் செய்வதைப் போன்றது. கறுப்பர் கூட்டத்தை வளர்த்துவிட்டாதே மு.க. ஸ்டாலின் போன்ற தலைவர்கள் தான்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருமாவளவன் குறித்து அவதூறு, காயத்ரி ரகுராம் மீது புகார்!

ABOUT THE AUTHOR

...view details