வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு மக்களிடம் வாக்குச் சேகரித்துவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கார்த்திகேய சிவசேனாபதி பூ மார்க்கெட் பகுதியில், பூ வியாபாரிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
பூ வியாபாரிகளிடம் ஆதரவு திரட்டிய கார்த்திகேய சிவசேனாபதி மேலும், அங்கிருந்த பொதுமக்கள், வியாபாரிகளுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். பூக்கடை வியாபாரிகளிடம் குறைகளைக் கேட்ட அவர், அனைத்து கோரிக்கைகளையும் நாங்கள் வெற்றிபெற்று நிறைவேற்றுவோம் என உறுதியளித்தார்.
அப்போது நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த ஒருவர், அவருக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தது அனைவரையும் கவர்ந்தது.
இதையும் படிங்க:சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு.. இளமை முறுக்குடன் சிலம்பம் சுத்திய கமல்ஹாசன்!