தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுற்றுப்புறச் சூழல், நீர்நிலைகளை பாதுகாக்க தவறிய அதிமுக - கனிமொழி குற்றச்சாட்டு - MP Kanimozhi Press Conference

கோயம்புத்தூர்: அதிமுக அரசு சுற்றுப்புறச் சூழலையோ, நீர்நிலைகளையோ பாதுகாக்கக்கூடிய மனநிலையில் இல்லை என திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி குற்றஞ்சாட்டினார்.

kanimozhi
kanimozhi

By

Published : Nov 28, 2020, 8:33 PM IST

திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி நாளை (நவ. 29) முதல் பத்து நாள்களுக்கு மேற்கு மண்டலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளார். சேலத்தில் தேர்தல் பரப்புரையைத் தொடங்குவதையடுத்து சென்னையிலிருந்து சேலம் செல்வதற்காக விமான மூலம் கோவை வந்த எம்பி கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, "கடந்த முறை பலத்த மழையால் சென்னையில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் பின்பும் இந்த அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. தண்ணீர் வரும் வழித்தடங்கள் சரிசெய்யப்படவில்லை, இந்த முறை ஓரளவிற்குப் பாதிப்பு குறைய காரணம் புயல் வலுவிழந்ததே. மறுபடியும் வெள்ளமோ புயலோ ஏற்பட்டால், பாதிப்பு ஏற்படும் சூழல் இருக்கின்றது.

இன்றைய ஆட்சியாளர்கள் சுற்றுப்புறச் சூழலையோ, நீர்நிலைகளையோ பாதுகாக்கக்கூடிய மனநிலையில் இல்லை. நாளை முதன் முதலில் பரப்புரையைத் தொடங்கவில்லை. திமுக பரப்புரையைத் தொடங்கி வெகு நாள்கள் ஆகிவிட்டன. இந்த நாள் அந்த நாள் என்ற எந்த வேறுபாடும் கிடையாது. 2ஜி வழக்கில் தீர்ப்பு ஏற்கனவே வந்துவிட்டது. சமூக வலைதளத்தில் பாஜக, அதிமுகவினர் பொய் பரப்புரைகளைச் செய்துவருகின்றனர்" என்றார்.

அதிமுக ஆட்சி பாடம் கற்கவில்லை

இதையும் படிங்க:பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து மருத்துவர் நிபுணர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details