கோவையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ஆந்திரா மாநில இசையமைப்பாளர் கண்டசாலாவின் 97ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. உலக தெலுங்கு அமைப்பினர் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட இவ்விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுக்குப் பிறகு பேசிய தமிழிசை செளந்தரராஜன், "இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதை எதிர் பார்க்கவில்லை. தெலங்கானா ஆளுநராக இருந்து தெலுங்கு அமைப்பினர் நடத்தும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருப்பது மகிழ்ச்சி.