தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“எடப்பாடி பழனிசாமி பற்றி பேசத் தயாராக இல்லை” - தனபால் பேட்டி - கனகராஜ்

Kodanad Murder Case: கோடநாடு கொலை வழக்கில் விசாரணைக்காக இரண்டாவது முறையாக ஆஜரான தனபால், எடப்பாடி குறித்து பேசக்கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் பேசமாட்டேன் எனவும், எனக்கு மனநிலை சரியில்லை என ஜாமீன் கேட்டதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Kanagaraj brother Dhanapal appears CBCID office for second time in Kodanad murder case
தனபால் மீண்டும் பேட்டி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 7:24 PM IST

Updated : Sep 26, 2023, 7:55 PM IST

தனபால் பேட்டி

கோயம்புத்தூர்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இரண்டாவது முறையாக கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் கனகராஜின் சகோதரர் தனபால் விசாரணைக்காக ஆஜரானார். சுமார் ஆறு மணி நேரம் விசாரணை முடிந்து வெளியில் வந்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “50-க்கும் மேற்பட்ட நபர்களின் பட்டியலைக் கொடுத்துள்ளேன். அதில் ஒரு சில நபர்களை விசாரித்துள்ளார்கள். அதில் அவர்கள் கூறியதற்கும், நான் கூறியதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது என்பது குறித்து கேள்வி எழுப்பினார்கள். கனகராஜின் இறப்பு, அதற்கு முன்பு என்ன நடந்தது என்பது குறித்து புதிதாக 62 கேள்விகளை என்னிடம் எழுப்பினார்கள். நான் அதற்கான பதிலைத் தெரிவித்தேன்.

தற்பொழுது எடப்பாடி பழனிசாமியை இது சம்பந்தமாக குறிப்பிட்டு பேசக்கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, அவரைப் பற்றி நான் எதுவும் சொல்லத் தயாராக இல்லை. தற்பொழுது 62 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், கடந்த முறை 50க்கும் மேற்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டது. தற்பொழுது நடைபெற்ற விசாரணையும் திருப்தியாக இருந்தது. மீண்டும் ஆஜராகும்படி எந்த வித சம்மனும் வழங்கப்படவில்லை.

எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல், நான் மன நலம் பாதிக்கப்பட்டவன் என்று கூறுவதை என்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? நான் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களை விசாரித்தால் ஆதாரங்கள் வெளி வரும். என்னுடைய இல்ல விழாவில் சுரேஷ்குமார் கலந்து கொண்டுள்ளார். அதற்கான புகைப்படங்களும் என்னிடம் உள்ளது. சுரேஷ்குமார்தான் 24 மணி நேரத்தில் குறைந்தது நான்கில் இருந்து 5 மணி நேரம் என்னுடைய தம்பி கனகராஜிடம் பேசுவார். என்னுடைய தம்பியும் அவரிடம் நன்கு பேசுவார்.

சென்னை சென்றாலும் இருவரும் ஒரே அறை எடுத்து தங்குவார்கள். ஒன்றாகவே மது அருந்திவிட்டு, வரும் வரை ஒன்றாகத்தான் இருப்பார்கள். கனகராஜ் உயிரிழந்த பொழுது மது அருந்தி உள்ளார். அளவுக்கு அதிகமாக ஊற்றிக் கொடுத்து அந்த இடத்திலேயே விபத்து நடத்தினார்களா அல்லது உடன் இருந்தவர்கள் வேறு இடத்தில் விபத்தை ஏற்படுத்திவிட்டு, இங்கு கொண்டு வந்து போட்டார்களா என்பது குறித்து முழுமையாகத் தெரியவில்லை. விசாரணையில் தெரிய வரும்.

சுரேஷ்குமார், என்னுடைய தம்பி இறந்த சம்பவ நேரத்தில் இல்லை. ஆனால், சுரேஷ்குமார் இரு தரப்பிலும் பாலமாக செயல்பட்டார். மது அருந்திய நேரத்தில் 10 பேர் இருந்துள்ளார்கள். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், இளங்கோவனின் தீவிர விசுவாசியைச் சொல்லலாம். மனநிலை சரியில்லை என எனக்கு ஜாமீன் வழங்கும்படி நான் எப்பொழுதுமே கேட்டதில்லை. தூக்கம் வராததால்தான் நான் அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனு இரண்டாவது முறையாக தள்ளுபடி!

Last Updated : Sep 26, 2023, 7:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details