ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'என் மீது காவியும் ஒட்டாது, கருப்பும் ஒட்டாது' - கமல்ஹாசன் - தேர்தல் பரப்புரையில் கமல்ஹாசன்

கோயம்புத்தூர்: "என் கட்சியில் உள்ளவர்களுக்கு நான் ஒரு பள்ளி ஆசிரியராக இருக்கிறேன். நான் படித்த நேர்மையை மற்றவர்களுக்கும் கற்றுத் தருகிறேன். 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்பது எனது கொள்ளை. என் மீது காவியும் ஒட்டாது, கருப்பும் ஒட்டாது" - கமல்ஹாசன்

kamal
kamal
author img

By

Published : Mar 21, 2021, 7:33 AM IST

கோயம்புத்தூர், பீளமேடு பகுதியில் மக்கள் நீதிமய்யம் சார்பில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

"விவசாயத்தை விஞ்ஞானிகளின் கையில் கொடுக்க வேண்டும். வியாபாரிகளின் கையில் கொடுத்து விடக்கூடாது. எங்கள் கட்சியை பொறுத்தவரை திருடாமல் வாழத் தெரிந்தவர்கள்தான் உள்ளனர். அவர்கள் இன்னும் நேர்மையாக வாழவேண்டும் என்பதை என்னால் நிர்பந்திக்க முடியும். என் கட்சியில் உள்ளவர்களுக்கு நான் ஒரு பள்ளி ஆசிரியராக இருக்கிறேன் நான் படித்த நேர்மையை மற்றவர்களுக்கும் கற்றுத் தருகிறேன்.

நான் குற்றம் சாட்டுபவர்கள் அனைவரும் ஊழல் நிறுவனத்தின் தலைவர்களாக இருக்கின்றனர். அவர்களைப் பற்றி என்னால் பேசாமல் இருக்கமுடியாது. நல்லதை யார் கற்றுக் கொடுத்தாலும் நான் கற்றுக் கொள்வேன். எனவே நீங்களும் எனக்கு கற்றுக் கொடுங்கள்.

பொதுகூட்டத்தில் பேசிய கமல்ஹாசன்

நலத்திட்டங்கள் இருப்பின் இலவசங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று எங்களது வேட்பாளர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அங்கு நடக்கும் நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பினால் இப்படிப்பட்ட கோமாளிகளிடமா நாம் மாட்டிக் கொண்டோம் என்று மக்களாகிய உங்களுக்குப் புரிந்துவிடும் என்பதனால்தான் அவற்றை நேரடியாக ஒளிபரப்பாமல் பதுக்கி வைத்துள்ளார்கள்.

ஊழலிலிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்கும் சுதந்திரப் போர் நாள் தான் ஏப்ரல் 6ஆம் தேதி. ராமநாதபுரத்தில் பிறந்து, பரமக்குடியில் வளர்ந்து சென்னை, மும்பை சென்று தற்போது கோயம்புத்தூர் வந்திருக்கிறேன். 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்பது எனது கொள்ளை. எனக்கு எந்த சாயமும் பூச முயற்சிக்க வேண்டாம். என் மீது காவியம் ஒட்டாது, கருப்பும் ஒட்டாது" எனப் பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details