தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’கமல் விரைவில் புரிந்து கொள்வார்’ ; வானதி சீனிவாசன் - Vanathi Srinivasan interview

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வானதி சீனிவாசன், சினிமாவில் நடிப்பதற்கும், மக்கள் பணி புரிவதற்கும் வித்தியாசம் உள்ளது என்பதை கமல் விரைவில் புரிந்து கொள்வார் எனத் தெரிவித்தார்.

கோவை பாஜக தெற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வானதி சீனிவாசன், 'சினிமாவில் நடிப்பதற்கும், மக்கள் பணி புரிவதற்கும் வித்தியாசம் உள்ளது’ என்பதை கமல் விரைவில் புரிந்து கொள்வார் என தெரிவித்தார்.
கோவை பாஜக தெற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வானதி சீனிவாசன், 'சினிமாவில் நடிப்பதற்கும், மக்கள் பணி புரிவதற்கும் வித்தியாசம் உள்ளது’ என்பதை கமல் விரைவில் புரிந்து கொள்வார் என தெரிவித்தார்.

By

Published : Mar 15, 2021, 7:28 AM IST

கோயம்புத்தூர்: நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளராக, பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் நேற்று (மார்ச் 14) அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கோவை செட்டி வீதி அசோக் நகர் பகுதியில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பின்னர் தெற்கு தொகுதி மக்களை சந்தித்த வானதி சீனிவாசன், செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

அப்போது ”கோவை தெற்கு தொகுதியில் எங்கள் வாக்குகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் நூறு விழுக்காடு வெற்றி உறுதி. தெற்கு தொகுதியில் நான் வேட்பாளராக நிற்பதாகத் தகவல் வெளியானபோது, தொடக்கத்தில் அதிமுகவில் எதிர்ப்பு இருந்தது. ஆனால், தற்போது எந்த எதிர்ப்பும் இல்லை.

செய்தியாளர்களை சந்தித்தவானதி சீனிவாசன்

சினிமாவில் நடிப்பதற்கும் மக்கள் பணி புரிவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதை கமல்ஹாசன் விரைவில் புரிந்து கொள்வார். சமூக ஊடகங்களில் செயல்படுபவர்களை மட்டும் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். கமல் ஒரு நடிகர் என்பதால், அவரைப் பார்க்க மக்கள் கூடுவார்கள். ஆனால், வாக்களிக்க மாட்டார்கள்.

சென்ற முறை தெற்கு தொகுதியில் நாங்கள் மட்டுமே தனிப்பட்ட முறையில் 34 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளோம். இம்முறை அதைவிட அதிகமான வாக்குகள் கிடைக்கும். மாநில அரசு மக்கள் மனதில் நெருங்கி இருப்பதால், அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவோம். பாஜகவில் புதியவர், உழைப்பவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது. வருகிற நாள்களில் நடிகை கௌதமி உள்பட, பல்வேறு சினிமா பிரபலங்கள் இந்தத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வர். நாளை வேட்புமனு தாக்கல் செய்யப்போகிறேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க :அதிமுக தேர்தல் அறிக்கை - மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு, மதுவிலக்கு அமல்படுத்தப்படும்!

ABOUT THE AUTHOR

...view details