தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடைப்பயிற்சியுடன் தேர்தல் பரப்புரை! - election news

கோயம்புத்தூர்: தெற்கு பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டவாரே தேர்தல் பரப்புரை செய்தார் கமல்ஹாசன்.

கோயம்புத்தூர் கமல் பரப்புரை
நடைப்பயிற்சியுடன் தேர்தல் பரப்புரை

By

Published : Mar 20, 2021, 10:56 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம், தெற்கு பகுதியிலுள்ள பூ மார்க்கெட் அருகே, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நடைபயிற்சி மேற்கொண்டவாரே பரப்புரை செய்தார். மேலும் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடம் கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார்.

நடைப்பயிற்சியுடன் தேர்தல் பரப்புரை

இதனைத் தொடர்ந்து காந்திபுரத்தில் தனியார் உணவு விடுதிக்கு (அன்னபூர்னா ஹோட்டலுக்கு) சென்று காபி குடித்த கமல்ஹாசன், அங்கிருந்தவர்களுடன் செல்பி எடுத்து கொண்டார். அப்போது அங்கிருந்த முதியவர் ஒருவர் நடிகர் கமல்ஹாசனிடம் “போற்றி பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே” பாடலை பாடிகாட்ட, அதை கமல் ரசித்தார்.

கோவை தெற்குத் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவதால், தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் நடைபயிற்சி செய்வது, அங்கிருக்கும் மக்களிடம் வாக்கு சேகரிப்பது போன்று களத்தில் இறங்கியுள்ளார். மேலும் கமல்ஹாசனை பார்த்தவுடன் பொதுமக்களும், அவரிடம் செல்பி எடுக்கவும், புகைப்படம் எடுக்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கமல்ஹாசனும் அவர்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்துகொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்.

இதையும் படிங்க: இது திராவிட மண், மோடி மஸ்தான் வேலை எல்லாம் இங்குப் பலிக்காது - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details