கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில், அதிமுக கூட்டணியில் பாஜகவின் வானதி சீனிவாசனும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமாரும் களத்தில் உள்ளனர். மேலும், சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களமிறங்கியுள்ள மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசனும், இத்தொகுதியில்தான் போட்டியிடுகிறார். இதனால் இத்தொகுதிக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்துள்ளது.
கோட்டைமேடு பகுதியில் கமல் பரப்புரை - கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை
கோயம்புத்தூர்: கோட்டைமேடு பகுதியில் மநீம முதலமைச்சர் வேட்பாளர் கமல் ஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
Kamal Haasan
இதனால் இந்தத் தொகுதி ஏற்கனவே சூடு பிடித்துள்ள நிலையில், கமல் ஹாசனும் அங்கேயே தங்கி பரப்புரையில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
அதன்படி, இன்று (மார்ச் 21) கோட்டைமேடு பகுதியில் மக்களை சந்திக்க சென்ற அவர் அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதன் பின் ஆதரவு திரட்டும் வகையில் அங்கு சிறிது நேரம் தேர்தல் பரப்புரை செய்தார். இதற்கு நடுவே தொண்டர்கள் இருவர் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி நடத்தியது கூட்டத்தினர் இடையே கலகலப்பை ஏற்படுத்தியது.